Latest Posts :

போலி பட்டா தயாரித்து மோசடி: 4 பேர் கைது

First Published : 17 December 2014 10:02 PM IST


திருச்சியில் ஒருவரின் நிலத்தை போலி பட்டா தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 4 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீரங்கம்,வடக்கு வாசல் தெருவைச் சேர்ந்தவர் சேகர (53). அங்குள்ள ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நவல்பட்டு அருகேயுள்ள குமபக்குடி ஊராட்சி, வேலாயுதம்குடியில் 1.68 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 25 லட்சமாகும்.

இந்நிலையில் இவருடைய நிலத்தை மாத்தூரைச் சேர்ந்த சேகர், அதே பகுதி கைனாங்கரையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி நாகராஜ் (34), மாத்தூர் ராசிபுரத்தைச் சேர்ந்த சேகர், சின்னசூரியூரைச் சேர்ந்த கணேசன் (63) ஆகிய 4 பேர் போலி பட்ட தயாரித்து அந்த நிலத்தை விற்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த நில உரிமையாளர் சேகர், இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரியிடம் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்ட நில அபுகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

விசாரணையில், அந்த நான்கு பேரும் சேகரின் நிலத்தை போலி பட்ட தயாரித்து விற்க முயன்றது தெரியவந்தது.இதையடுத்து போலீஸார் மேற்கண்ட 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனர்.

Share this article :

Post a Comment

Blogger Widgets
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. How To Do Anything - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger