சட்டம் என்ன சொல்கிறது
சட்டம் குறித்த கேள்வி – பதில்கள்
by வழக்கறிஞர் A K ராஜேந்திரன்
கேள்வி 1.
நான் பல வருடங்களுக்கு முன்பு கோவை அவினாசி ரோட்டில் 10 சென்ட் இடம் வாங்கினேன். கடந்த மாதம் அந்த இடத்த விற்க முயற்ன போது, அந்த இடம் 2005 ஆம் ஆண்டே வேறொருவருக்கு விற்கப்பட்டுள்ளது தெரிய வந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பார்த்த போது, எனது பெயரில் யாரோ கையயழத்து, கைரேகை போட்டு ஆள் மாற்றம் செய்து விற்றுள்ளனர். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தயவு செய்து எனக்கு உதவுங்கள்.
R.பாக்கியராஜ், பல்லடம்
பதில் – 1.
ஒவ்வொரு பத்திரம் பதிவு செய்யும் போது விற்பவரை எனக்குத் தெரியும் என இரு நபர்கள் சாட்சிக் கையயழுத்திட வேண்டும். விற்பவர் பத்திரத்திலும், பதிவாளர் அலுவலகத்திலுள்ள பதிவேட்டிலும் கைரேகை வைக்க வேண்டும். உங்கள் பிரச்சினையில், சாட்சிக் கையயழுத்திட்டவர்களுக்கும் இடத்தை விற்றவருக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும். நீங்கள் சாட்சிக் கையழுத்திட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், பதிவு செய்யப்பட்ட கிரையப் பத்திரம் செல்லாது என அறிவிக்கக் கோரி சிவில் நீதி மன்றத்திலும் நடவடிக்கை எடுக்கலாம்.
கேள்வி -2.
எனக்குக் காசோலை கொடுத்தவர்,தற்போது அவருடைய கையயழத்து இல்லையயனவும், இந்த காசோலை திருடு போய் விட்டதாகவும் கூறுகிறார். அவர் என் முன்னிலையில் கையயழுத்துப் போட்டு அந்தக் காசோலையை நேரடியாக என்னிடம் கொடுத்தார். இப்போது கையயழுத்தே அவருடையது இல்லை என்கிறார். எனக்கு என்ன செய்வதென புரியவில்லை. தங்களுடைய உதவியை நாடுகிறேன். இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?
S.ரத்தினசாமி, திருப்பூர்.
பதில் – 2.
அவர் உங்களைப் பயமுறுத்த அப்படி கூறலாம். அவருடைய கையழுத்துதான் என்பது உங்களுக்கு நேரிடையாகத் தெரிகிறது.காசோலையை அவரிடமிருந்தே நீங்களே பெற்றிருப்பதாலும் அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்யுங்கள். அங்கும் அவர் அவருடைய கையயாப்பம் இல்லையயன மறுத்தால் அவருடைய மற்ற கையயாப்பங்களுடன் இணைத்துப் பார்த்து நீதிமன்றமே ஒரு முடிவுக்கு வரலாம். இல்லையயனில், கையயழுத்து நிபுணருக்கு அனுப்பிக் கருத்துக் கேட்கலாம்.
கேள்வி – 3.
தான செட்டில்மெண்ட்டுக்கும் உயிலுக்கும் என்ன வித்தியாசம்? தயவு செய்து கூறவும்.
S.குமார், கோவை.
பதில் – 3.
ஒருவர் தன்னுடைய சொத்தை தான செட்டில்மெண்ட் மூலம் ஒருவருக்கு எழுதிப் பதிவு செய்தால் அது உடனுக்குடன் செயலுக்கு வந்து விடும். தான செட்டில்மெண்ட் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். உயில் எழுதி வைப்பவர் காலமான பிறகுதான் நடைமுறைக்கு வரும் புதிவு செய்ய வேண்டியதில்லை. சாட்சிகள் வேண்டும்.
கேள்வி 4.
நான் ஒரு சீட்டுக் கம்பெனியில் ரூ.1,00,000 க்குச் சீட்டுப் போட்டிருந்தேன். சீட்டை எடுத்தப்பிறகு சரியாகத் தவணைத் தொகை செலுத்த இயலாமல் போய்விட்டது. நான் அதே கம்பனியில் வைத்திருந்த என்னுரைய டெபாசிட் தொகையை சீட்டு பாக்கிக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளம்படி கடிதம் கொடுத்துவிட்டு வெளியூருக்கு வேலை நிமித்தமாக சென்று கடந்த மூன்றாண்டுகளாக அங்கு வசித்து வருகிறேன். இந்த நிலையில் சீட்டுத் தவணை செலுத்தவில்லை என சீட்டு நடுவர் முன்பு வழக்கு தொடர்ந்து என்னைக் கைது செய்ய சிவில் கோர்ட்டில் உத்தரவு பெற்றிருப்பதாகத் தெரிய வருகிறது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்.
S.R.ராஜதுரை, கோவை 8
பதில் – 4
உங்களுடைய டெப்பாசிட் பணம் சீட்டு நிலுவைத் தொகைக்கு சரியாக இருந்தும் அதனை எடுத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளாமல், உங்கள் மீது சீட்டு நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருந்தால், அது சேவை குறைபாடு என்கிற அடிப்படையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் சீட்டு நிறுவனத்தின் மீது வழக்கத் தொடர்ந்து இழப்பீடு கேட்க இயலும். அதே சமயம், சிவில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மேற் சொன்ன காரணங்களுக்காக இரத்து செய்யக் கோரி ஒரு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
கேள்வி – 5
இந்து பொது குடும்பத்தைச் சேர்ந்த மைனரின் சொத்தை அவனது கார்டியன் தாயார் (தகப்பன் இல்லை) வில்லங்கங்கள் செய்தால் அவை செல்லுமா?
முகுந்தன், வால்பாறை
பதில் – 5
மைனர் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவம் மைனரின் சொத்தைப் பாதுகாத்து மேற்பார்வை செய்து வரும் கார்டியன் வில்லங்கப்படுத்தினால், அதை செல்லாது என கூற இயலாது. பின்னால் வீண் பிரச்சினைகள் வராமல் தவிர்க்க முன் கவனமாகவும் இருக்கவும் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மைனரின் சொத்தை வில்லங்கம் செய்வது அவரது நலனுக்காக என அனுமதி பெற்று வில்லங்கம் செய்தால் அது செல்லுபடி ஆகும். யாரும் கேள்வி கேட்க இயலாது. மைனரே கூட அவர் மேஜரானவுடன் நீதிமன்ற அனுமதி பெற்று செய்யப்பட்ட வில்லங்கத்தை கேள்வி கேட்க இயலாது.
கேள்வி – 6.
நானும் என் பக்கத்து வீட்டுப் பெண்ணும் சிறுவயது முதலே உயிருக்கு உயிராகக் காதலித்துவருகிறோம். இந்நிலையில் பெண்ணின் பெற்றோர்கள் எங்கள் விருப்பத்திற்கு மாறாக
வேறு இடத்தில் திருமணம் நிச்சயித்துள்ளார்கள். இது விசயமாக ஊர் பஞ்சாயத்திடம்முறையிட்டோம். அதற்கு அவர்கள் ரூ.25,000/- கொடுத்தால் எங்கள் திருமணம் நடக்கும்என்கிறார்கள். பதிவுத் திருமணம் செய்து கொண்டாலும் அந்தப் பணம் கொடுக்க வேண்டுமாம்அந்த அளவிற்கு என்னிடம் பணம் இல்லை. இச்சூழலில் நாங்கள் சாகத் துணிந்து விட்டோம்.
தங்களுடைய அறிவுரை தேவை.
பதில் – 6.
“நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடுகள் கேட்குமாம்”. நீங்கள் நரியை அணுக வேண்டியதில்லை. நல்ல மனம் படைத்தவர்களை அணுகி அவர்கள் மூலம்
திருமணம் செய்து கொள்ளுங்கள். ஓருயிர் ஈருடலான தாங்கள் எதையும் தாங்கிக் கொள்ளலாமே!எதற்கு மரணத்தைத் தழுவ வேண்டும்? மணம் புரிந்து மகிழ்ச்சியோடு வாழுங்கள். “ வாழ்க்கை
வாழ்வதற்கே” என்பதை மனதில் வையுங்கள்.
கேள்வி – 7
நான் அரசு ஊழியனாக இருந்து ஒய்வு பெற்றவன். ஓய்வு பெற்ற பின் என் மனைவி இறந்துவிட்டாள். நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். எனக்குப் பிறகு என்மனைவிக்குக் குடும்ப ஓய்வு ஊதியம் கிடைக்குமா? என்பதைத் தெரிவியுங்கள்.
பதில் –7
உங்கள் இரண்டாவது மனைவியின் புகைப்படத்தையும் அவரது பெயரையும் இப்போதே நீங்கள்பணிபுரிந்த அரசுத் துறைக்குத் தகுந்த ஆதாரங்களுடன் அனுப்பி உங்கள் இரண்டாவது மனைவியின் பெயரை உங்கள் முதல் மனைவிக்குப் பதிலாகப் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு உங்கள் முதல் மனைவியின் பெயருக்குப் பதிலாகப் பதிவு செய்து கொண்டால், உங்கள் இரண்டாவது மனைவிக்கு உங்களுக்குப் பிறகு குடும்ப
ஓய்வூதியச் சட்டம், ஓய்வு பெற்றவரின் மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் கொடுக்க வேண்டுமென்றுகூறுகிறது. இரண்டாவது மனைவிக்குக் குடும்ப ஒய்வூதியம் இல்லையயன்று சட்டம் கூறவில்லை.
கேள்வி – 8.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீஸார் விலங்கு மாட்டி நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லலாமா?
பதில் – 8
குற்றம் சாட்டப்பட்ட யாரையும் விலங்கிட்டு அழைத்துச் செல்ல காவல் துறையினருக்குஉரிமையில்லை. அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் அவர்களை அவ்வாறு செய்ய
அனுமதிப்பதில்லை. விலங்கிட்டு ஒருவரை அழைத்துச் செல்வது மனித உரிமையும், இந்தியஅரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளுள் அவர்களை அவ்வாறு செய்ய அனுமதிப்பதில்லை
விலங்கிட்டு ஒருவரை அழைத்துச் செல்வது மனித உரிமையையும், இந்திய அரசமைப்புச் சட்டஅடிப்படை உரிமைகளை மீறுவது ஆகும். காவல் துறை நிலை ஆணை (police standing orders) 666 ஐ மீறுவதாகும். பத்தாண்டுகளுக்கு முன்பே இந்திய உச்ச
நீதிமன்றம் காவல் துறையினர் யாரையும் விலங்கிட்டு அழைத்துச் செல்லக் கூடாதெனதெளிவு படுத்தியுள்ளது. இதைப் பற்றியயல்லாம் காவல் துறையினருக்கும் புரிவதில்லை.
குற்றவியல் நீதிபதிகளுக்குக் கூட இதைக் கண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை.காவல் துறையினர் ஒருவரை விலங்கிட்டு அழைத்துச் செல்வாரானால், அதற்காக அவர்கள் மீது
வழக்குத் தொடரலாம். குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கரவாதி என்றும் அவரை விலங்கிடாமல் அழைத்துச் செல்ல முடியாது என்றும் நீதிமன்றம் நம்புகிற வகையில் காவல்த் துறையினர்
மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்.
கேள்வி –9
நான் முதலில் ஒரு உயில் எழுதி அதன் மூலம் என்னுடைய வீட்டை கடைசி மகன் பெயரில்எழுதி வைத்தேன். அடுத்து வேறு ஒரு உயில் எழுதி ஒரு மகன் மற்றும் ஒரு மகன் பெயரில்
வீட்டை எழுதி வைத்தேன். பின்னர் அந்த உயிலையும் ரத்து செய்து விட்டு மூன்று மகன்கள்பெயரில் எழுதினேன். கடைசியாக எழுதிய உயில் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யப்படாதஉயில் செல்லுமா?
பதில் – 9
நீங்கள் கேட்பதைப் பார்த்தால் உங்களுக்கு உயில் எழுதுவதுதான் வேலையாக இருக்கிறதுபோலும். உயில் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். எழுதியதைக் கிழித்தும்
போடலாம். நீங்கள் கடைசியாக எழுதிய உயிலே செல்லும். உயில் பதிவு செய்யப்படவேண்டும் என்ற கட்டாயம் சட்டத்தில் இல்லை. இருந்தாலும் பதிவு செய்து கொண்டால்நல்லது என்பதை அறியவும்.
கேள்வி – 10
அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். ஆட்சி மாறியவுடன்கொள்ளையடித்த சொத்துக்களைப் பறித்துக் கொள்ளச் சட்டம் ஏதாவது உண்டா?
பதில் – 10
நேற்று கொள்ளையடித்தவர்கள் இன்று உத்தமர்களாக வலம் வருகின்றனர். இன்றுகொள்ளையடிப்பவர்கள் நாளைக்கு உத்தமர்களாக வலம் வர இருக்கிறார்கள். இதுதானே
நாட்டின் இன்றைய நிலை. தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ்கொள்ளையடித்த சொத்துக்களைப் பறிக்க வழி வகைகள் செய்ய வேண்டும். பூனைக்கு யார்மணி கட்டுவது?
கேள்வி 11.
அரசு ஊழியர் ஒருவருக்குத் தவணைமுறையில் பிரிட்ஜ் வாங்க நான் பிணைக் கையயழுத்துப் போட்டேன். ஆனால் சரியாகத் தவணையைக் கட்டாத நிலையில் அவர் எங்கோ மாற்றலாகிப் போய்விட்டார். தவணை முறையில் பிரிட்ஜ் கொடுத்த நிறுவனம் என் மீதும் அவர் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளது. நான் கண்டிப்பாகப் பணம் கட்ட வேண்டுமா?
பதில் 11
பிரிட்ஜ் வாங்க பிணைக் கையழுத்து நீங்கள் போட்டதால் பணம் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். பிரிட்ஜ் வாங்கியவர் எங்குள்ளார் என்பது தெரியாத நிலையில் பிரிட்ஜ் நிறுவனம் நீதிமன்றத்தின் மூலமாக வசூல் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் நீங்கள் பிரிட்ஜ் வாங்கியவர் மீது வழக்குப் போட்டு உரிய தொகை, அதற்குண்டான வட்டி மற்றும் வழக்கிற்கான செலவுத் தொகைகளையும் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்.
கேள்வி –1 2
ஒரு குழந்தை பிறந்த பின்பு என் மனைவி வேறு ஒருவனைக் காதலித்து அவனுடன் சென்று விட்டாள். குழந்தையையும் அழைத்துக் கொண்டுப் போய்விட்டாள். எனக்கு விடுதலையும் எழுதிக் கொடுத்துவிட்டாள். அதனால் என்றைக்காவது ஒரு நாள் வந்து சொத்தில் பங்கு கேட்க இயலுமா?
பதில் – 12
உங்கள் மனைவி எழுதிக் கொடுத்த விடுதலைப்பத்திரம் கண்டிப்பாகச் செல்லாது. நீங்கள் முறையாக நீதிமன்றம் மூலமாக விவாகரத்து வாங்கியிருக்க வேண்டும். அதனால் நீங்கள் வேறொரு திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வத் தடை இருக்கும். விவாகரத்து நடைபெறவில்லையயனில், உங்கள் சொத்தில் பங்கு வேண்டுமென்று உங்களை விட்டுச் சென்ற மனைவி உரிமை கொண்டாடுவாள்.
கேள்வி – 13
கொலை அல்லது தற்கொலை பற்றித் தகவல் கொடுத்தால், தகவல் கொடுத்தவர் சாட்சி சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்களே, சரியா?
பதில் – 13
கண்டிப்பாகச் சாட்சி சொல்லித்தான் ஆக வேண்டும். அதில் எந்தவிதமான சந்தேகமோ,தவறோ கிடையாது. வழக்கில் உண்மையான தகவலைத் தான் அறிந்தவாறு சொல்வது நல்ல குடிமகனின் கடமை என்பதை அறிந்து கொள்ளவும் சாட்சி சொல்லப் பயப்படுவது, தன் கடமையைத் தட்டிக் கழிப்பதற்கு ஒப்பாகும்; குற்றமும் ஆகும் என்பதை மனதில் வையுங்கள்
கேள்வி – 14
திருமணத்திற்குப்பிறகு இரண்டு மாதங்கள்தான் என் கணவர் என்னுடன் வாழ்ந்து வந்தார். பின்னர் என்னைத் துரத்தி விட்டார். எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அன்று வந்து பார்த்துவிட்டுச் சென்றவர்தான், இன்னும் திரும்பவேயில்லை. இப்போதைக்குப் பிள்ளைக்கு வயது பத்தாகிறது. வேறு திருமணம் செய்து அவர் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் என் ஆண் குழந்தை அவருக்கு வேண்டுமாம்! அவர் கேட்பது சரியா? என் பிள்ளையை இழக்க நேரிடுமா?
பதில் – 14
நீதிமன்றம் சென்றால் கூட உங்களிடமிருந்து உங்கள் குழந்தையை உங்களை விட்டு ஓடிப் போன கணவன் பெற முடியாது. கண்டிப்பாகக் குழந்தையை உங்களிடமிருந்து பிரிக்க மாட்டார்கள் என்கிற தைரியத்தில் இருங்கள்.
கேள்வி – 15
நகரங்களில் சினிமாA/C தியேட்டர் என்று விளம்பரப் படுத்தி, அதற்குண்டான கட்டணத்தையும் சேர்த்து ரூ.50/-, ரூ.100/- என்று டிக்கெட்டுகளை விற்பனை செய்கின்றனர். ஆனால் சினிமா தியேட்டரில் A/C வேலை செய்வதில்லை. இப்படிப்பட்ட சூழலில் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா? என்ன நடவடிக்கை எடுக்கலாம்?
பதில் – 15
தியேட்டர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கலாம். வசதி செய்து கொடுக்காதது ஏமாற்றுக் குற்றமாகும். தொடர்ந்து கொண்டேயிருந்தால், காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் குற்ற வழக்குப் பதிவு செய்வார்கள். மேலும் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒரு சிறு தொகை நஷ்ட ஈடாகக் கேட்கலாம்.
+ comments + 3 comments
பெண் வீட்டில் என்னை திருமணம் செய்து ஏமாற்றி 1 மாதத்திற்குள் வீட்டுக்கு அவள் ஓடிவிட்டாள் அவள் அம்மா மற்றும் குடும்பம் என்னை வேணாம் என்கிறது ஆனால் அவள் இங்கு வந்து வாழட்டும் என்றால் முடியாது என்கிறார்கள் கூப்பிட சென்றால் என்னை வௌக்குமாறு கொண்டு அடிக்கிறார்கள் கல் விட்டு எறிகிறார்கள் என்னிடம் எந்த தப்பும் இல்லை குறையும் இல்லை திட்டமிட்டு என்னை ஏமாற்றி விட்டார்கள் நான் எதிர்ப்பாக ஏதும் செயாமல் வந்து விட்டேன் நான் அதற்க்கு கூட போலீஸ் புகார் அளிக்கவில்லை . எனக்கு நான் செலவு செய்தது மற்றும் என்னை வெளக்கமாறு, கல் கொண்டு பொதுவிடத்தில் அடித்ததுக்கு நஷ்ட ஈடு நான் கோரா வழி உள்ளதா? என்னை பல்வேறு கொடுமை படுத்தி விட்டார்கள்.
சார் ,என்னுடைய அம்மா எனக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டு மனை நிலத்தை தான செட்டில்மெண்ட் மூலம் கொடுத்தார் , தற்பொழுதுதான் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் சர்வே எண் தவறாக குரிப்பிடப்பட்டுள்ளதை அறிந்தேன் ,இந்த ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா அல்லது ரீ செட்டில்மெண்ட் செய்ய முடியுமா ? எனது அம்மா இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் .
Post a Comment