Latest Posts :
Recent Posts
Showing posts with label Tamil Articles. Show all posts
Showing posts with label Tamil Articles. Show all posts

பேஸ்புக்கில் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்வதற்கு




சமூக இணையதளமான பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள் தினந்தோறும் பகிரப்படுகிறது.   நீங்கள் சுற்றுலா செல்லும் போது எடுத்த புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறீர்கள்.   இவைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து அட்டகாசமான பேக்ரவுண்ட் மியுசிக்குடன் கூடிய வீடியோவாக உருவாக்கலாம்.   இதற்கு முதலில்http://www.timelinemoviemaker.com/ தளத்திற்கு செல்லவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் Make your Movie என்ற பட்டனை அழுத்தவும்.   இந்த பட்டனை அழுத்தியவுடன் பேஸ்புக் permission கேட்கும் Allow கொடுக்கவும்.   பிறகு உங்களுடைய Timeline movie தயாராகும். உங்களுடைய கணக்கில் உள்ள புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வீடியோ தயாரிக்கும்.   உங்கள் கணக்கில் குறிப்பிட்ட அளவு புகைப்படங்கள் இல்லை என்றால் புகைப்படத்தை சேருங்கள் என்ற அறிவிப்பை வெளியிடும்.   முடிவில் உங்களுடைய வீடியோ தயாராகிவிடும். இந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி கொள்ளலாம்.   இப்பொழுது உங்களுக்கு பிடித்த மாதிரி வீடியோவாக உருவாக்கியதும் Share என்ற பட்டனை அழுத்தி அந்த வீடியோவை உங்கள் கணக்கில் பகிருங்கள்.

அனைத்து பேஸ்புக் நண்பர்களின் புகைப்படத்தை ஒரே இடத்தில் பெறுவதற்கு



நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விடயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இந்த பேஸ்புக் தளம் மூலம் நம் நண்பர்களின் வட்டம் பெருகிக்கொண்டே போகிறது.
நண்பர்கள் அவர்கள் கணக்கில் அவர்களுக்கு பிடித்தமான புகைப்படங்களை போட்டு இருப்பார்கள். அந்த புகைப்படங்களை காண வேண்டும் என்றால் ஒவ்வொரு கணக்கில் சென்று பார்க்க வேண்டும்.
உங்கள் நண்பர்கள் பட்டியலில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும். இது நேரத்தை வீணடிக்கும். ஆகவே உங்கள் பேஸ்புக் நண்பர்களின் ஒட்டுமொத்த புகைப்படங்களை ஒரே இடத்தில் தரவிறக்கம் செய்ய ஒரு வழி உள்ளது.
1. இதற்கு முதலில் இந்த லிங்கில் க்ளிக் செய்து அந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
2. ஓபன் ஆகும் விண்டோவில் Login with Facebook என்ற பட்டனை அழுத்தவும்.
3. அந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow என்பதை க்ளிக் செய்யவும்.
4. அவ்வளவு தான் பேஸ்புக் நண்பர்களின் புகைப்படங்களை அந்த தளம் காண்பிக்க தொடங்கும்.
5. லோடிங் ஆகி முடிந்ததும் உங்களுடைய பேஸ்புக் நண்பர்களின் ஒட்டுமொத்த புகைப்படங்களும் அந்த தளத்தில் காணப்படும்.
6. உங்களுக்கு வேண்டிய நண்பரை க்ளிக் செய்து அவருடைய புகைப்படங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
7. இது போன்று ஒவ்வொரு நண்பர்கள் பெயரையும் க்ளிக் செய்தால் அவர்களின் புகைப்படங்கள் தெரியும்.
8. அந்த புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய அந்த குறிப்பிட்ட புகைப்படத்தின் மீது இருக்கும் அம்புக்குறியை க்ளிக் செய்தால் அந்த புகைப்படத்தை உங்கள் கணனியில் சேமித்து கொள்ளலாம்.
அந்த குறிப்பிட்ட நண்பரின் ஒட்டுமொத்த புகைப்படத்தையும் ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு அருகே உள்ள download என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
இதில் நீங்கள் விரும்பிய வசதியை தேர்வு செய்து கொண்டு புகைப்படத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் உள்ள இன்னொரு வசதி நீங்கள் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் போது PDF ஆக மாற்றியும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

லிங்கா திரை விமர்சனம்!

ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தின் முன்பதிவு ஆரம்பித்த அரை மணி நேரத்திலே சென்னையின் அனைத்து திரையரங்குகளிலும் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன என்றும் அடுத்த ஒரு வாரத்தில் வசூலில் பெரும் சாதனைப் படைக்கப் போகிறது என்று சில ஊடகங்களில் வந்த செய்தியெல்லாம் உண்மையில்லையாம்.படம் வெளியாகி நான்காவது நாளே அதாவது 16 -ஆம் தேதி திங்கள்கிழமைக்கு சென்னையின் முக்கிய திரையரங்குகளான சங்கம் காம்ப்ளக்ஸ், உட்லண்ட்ஸ், தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளக்ஸ், ஐ ட்ரீம்ஸ் போன்றவற்றில் டிக்கெட்கள் உள்ளன.


இதை நம்மிடம் சொன்ன பிரபல விநியோகஸ்தர் ஒருவர்,”ரஜினியின் ரசிகர்கள் பலருக்கு லிங்கா படம் திருப்தியளிக்க வில்லை என்றுதான் சொல்கிறார்கள், இது சூப்பர் ஸ்டாரின் படம் போல இல்லை என்றும் கத்திக் கூச்சல் போடும் போக்கு அதிகமாக இருக்கிறது.அதுவும் இன்று திருநெல்வேலியில் ஒரு தியேட்டரில் படம் சரியில்லை என்று சத்தம் போட்ட ரஜினி ரசிகர்கள் அந்த தியேட்டரில் அராஜகத்தில் ஈடுபட்டு, சேர், டோர் போன்றவற்றை உடைத்து விட்டு போயுள்ளார்கள். அதே போல சென்னையில் உள்ள காசி தியேட்டரில் நள்ளிரவு 1 மணி காட்சி ஆரம்பிப்பதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டதால், திரையரங்க கண்ணாடிகள் சிலவற்றை ரசிகர்கள் உடைத்தார்கள்.இதெல்லாம் ரஜினி பட ரிலீசின் போது நடக்காத விஷயம். போற போக்கைப் பார்த்தால் இந்த படமும் டிஸ்ட்ரிபியூட்டர்களை குப்புற தள்ளி விடும் என்றுதான் தோன்றுகிறது” என்றார்.
அது சரி.. லிங்கா பட விமர்சனம்தான் என்ன? என்று கேட்பவர்களுக்காக::
’கோச்சடையான்’ என்ற பொம்மைப் படத்திற்குப் பிறகு ”ரஜினிகாந்த் அவ்வளவு தான்..” என்று நினைத்த ரசிகர்களுக்கு, தான் இருப்பதை நினைவுப் படுத்த, அதிவிரைவு விருந்து படைக்க நினைத்த ரஜினிகாந்த், வெந்ததும் வேகாததுமாக கொடுத்திருக்கும் படம் தான் ’லிங்கா’.
வெள்ளையன் காலத்து இந்தியாவில் குறு நில மன்னர் லிங்கேஸ்வரனான ரஜினிகாந்த், பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஐஏஎஸ் படித்து கலெக்டராகவும் இருக்கிறார். அப்போது சோலையூர் என்ற கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் தண்ணீர் இன்றி வறுமையால் தற்கொலை செய்வதை அறியும் அவர், அந்த இடத்தில் அணை ஒன்றை கட்ட முடிவு செய்கிறார். ஆனால், இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்க, தனது கலெக்டர் வேலையை ராஜினாமா செய்யும் மன்னர் ரஜினிகாந்த், தனது சொந்தப் பணத்தில், கிராம மக்களின் உதவியோடு அணை கட்ட ஆரம்பிக்கிறார். ரஜினிகாந்த் அணை கட்டினால் தங்களுக்கு அவமானம் ஏற்படும் என்பதால், அணையை கட்டவிடாமல், பிரிட்டிஷ் அரசாங்கம் பல சதிவேலைகளை செய்ய அதை அனைத்தையும் முறியடித்து அணையை வெற்றிகரமாக கட்டி முடிக்கும் ரஜினிகாந்தை, அணை திறப்பு விழாவின் போது, பிரிட்டிஷ் அதிகாரிகள் சூட்சியின் காரணமாக, கிராம மக்கள் அவமானப் படுத்தி அங்கிருந்து விரட்டியடிப்பதுடன், அணை அருகே அவர் கட்டிய கோவிலையும் மூடி விடுகிறார்கள்.
பிறகு, ரஜினிகாந்த் அப்பாவி என்றும், தனது சொத்துக்களை இழந்து அணையை அவர் கட்டிய விபரமும் கிராம மக்களுக்கு தெரியவர, அவர்கள் ரஜினியை சந்தித்து மன்னிப்பு கேட்டு, மீண்டும் கிராமத்திற்கு வருமாறு அழைக்கிறார்கள். அவர்களுடைய அழைப்புக்கு ரஜினி மறுப்பு தெரிவித்ததால், அந்த கோவில் திறந்தால் அது லிங்கேஸ்வரனாலாயோ அல்லது அவருடைய வாரிசு கையினாலோயோ மட்டுமே திறக்கப்படும், இல்லையெனில் அந்த கோவில் மூடியே வைக்கபப்டும் என்று கிராமத்து நாட்டாமை விஜயகுமார் சத்தியம் செய்துவிட்டு இறந்து போகிறார்.
இந்த கதை பிளாஸ்பேக்கில் நடந்து முடிக்க, லிங்கேஸ்வரனின் பேரனான மற்றொரு ரஜினி கையினால் அந்த கோவிலை திறக்க கிராம மக்கள் முடிவு செய்கிறார்கள். அதற்காக, அந்த கிராமத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிருபர் அனுஷ்கா, பேரன் ரஜினிகாந்தை கண்டுபிடித்து விஷயத்தைச் சொல்லி அவரை கிராமத்துக்கு வருமாறு அழைக்கிறார். திருடனான பேரன் ரஜினிகாந்த், போலீஸின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக அந்த கிராமத்துக்கு செல்கிறார். அங்குள்ள சிவன் கோவிலில் உள்ள விலை உயர்ந்த மரகத லிங்கத்தை திருடிச் சென்றுவிடலாம் என்ற முயற்சியில் ஈடுபடும் ரஜினிகாந்த், அந்த கோவில் மற்றும் அந்த அணை கட்ட, ராஜா லிங்கேஸ்வரன் பட்ட கஷ்ட்டத்தையும், தற்போது அந்த கோவிலை திறந்தால் தான் அணையையும் ஊர் மக்களையும் காப்பாற்ற முடியும் என்ற விஷயத்தையும், அந்த ஊர் பெரியவர் மூலம் அறிகிறார். பிறகு லிங்கத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து சென்றாரா அல்லது அந்த கோவில் ரகசியத்தை அறிந்து அந்த அணையையும், கிராமத்தையும் காப்பாற்றினாரா என்பது தான் க்ளைமாக்ஸ்.
தனது ரெகுலர் கமர்ஷியல் படங்களில் இருந்து விலகி, ‘எந்திரன்’ போன்ற படங்களில் நடித்த போதும் சரி, ஒரு நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள ‘சந்திரமுகி’ போன்ற படங்களில் நடித்த போதும் சரி, ரஜினிகாந்த் என்ற பெயருக்கும், அவரிடம் ரசிகர்கள் வைத்திருக்கும் எதிர்ப்பார்ப்புக்கும் எந்தவித பங்கமும் வந்துவிடாமல், முழு திருப்தியைக் கொடுத்த ரஜினிகாந்த், இந்த படத்தில் அவரும் ஏமாந்து, அவருடைய ரசிகர்களையும் பெரிய அளவில் ஏமாற்றியிருக்கிறார்.
ரஜினிகாந்தின் நடிப்பு குறித்து நாம் விமர்சனம் செய்வது முட்டாள்த்தனம். காரணம் அவருக்கும் நடிப்புக்கும் ரொம்ப தொலைவு என்பதை அவருடைய ரசிகர்களே அறிவார்கள். மற்றபடி அவரிடம் அனைவருக்கும் பிடித்த அந்த ஸ்டைல், அந்த விறுவிறுப்பு உள்ளிட்ட ரஜினியின் அம்சங்கள் இந்த படத்தில் கடுகு அளவு தான்.
ராஜா ரஜினிக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹா நடித்துள்ளார். பொந்தா கோழி போல கொழுக் மொழுக் என்று இருக்கும் இவரை எப்படி பாலிவுட் நாயகியாக அங்கீகரித்திருக்கிறது என்பது ரொம்ப ஆச்சரியமாக உள்ளது. நடிப்பிலும் சரி பாடல் காட்சிகளிலும் சரி எந்த இடத்திலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. திருடன் ரஜினிகாந்துக்கு ஜோடியாக வரும் அனுஷ்கா, தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். சில இடங்களில் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார்.
படத்தில் ரசிக்க கூடிய காட்சிகள் என்றால், அது சந்தானம் வரும் சில காட்சிகளை மட்டும் சொல்லலாம். மற்றபடி அவருடன் வரும் கருணாகரன், பாலாஜி உள்ளிட்டவர்கள் செட் பிராப்பர்ட்டியாகவே பயன்பட்டிருக்கிறார்கள்.
ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் நடிப்பதை விட பேசுவது தான் அதிகம். பேசுகிறார்கள்…பேசுகிறார்கள்…பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் பொதுவாக இரவு நேரங்களில் தான் பணி புரிவார் என்றும், பகலில் உறங்குவார் என்றும் சொல்வார்கள். இந்த படத்திற்கு அவர் பகலில் இசையமைத்திருப்பாரோ என்று எண்ணும் அளவுக்கு பாடல்கள் இருக்கின்றன. பின்னணி இசையில் சில இடங்களில் ரஹ்மான் ஸ்கோர் பண்னியிருந்தாலும், பெரும்பாலான இடங்களில், ரஹ்மான் இசைப் பள்ளியில் ஆரம்ப நிலையில் இருக்கும் மாணவர்கள் இசையமைத்திருப்பார்களோ, என்று எண்ணத் தோன்றுகிறது.
ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தாலும், சண்டைக்காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் தான் ஆதிக்கம் செலுத்துகிறது.
வேகமாக செயல்படக்கூடிய ரஜினிகாந்தின், படத்தின் காட்சிகள் ரொம்ப மெதுவாக பயணிப்பது தான் இப்படத்தின் முதல் பலவீனம். அதிலும் ரஜினிகாந்தின் அறிமுக காட்சியில் எந்தவித ஈர்ப்பும் இல்லாதது ரசிகர்களை ஆரம்பத்திலேயே சோர்வடைய செய்கிறது.
மன்னர் ரஜினிகாந்தின் அறிமுகத்தின் போது வரும் ரயில் சண்டைக்காட்சி ரொம்ப நீளமாக உள்ளது. முழு சண்டைக்காட்சியையும் கிராபிக்ஸ் செய்திருப்பதால் ”எப்படா…முடியும்…” என்று ரசிகர்கள் புலம்பவது தியேட்டருக்கு வெளியே வரை கேட்கிறது.
திருடனாக வரும் ரஜினிகாந்த், வைர நகை கண்காட்சியில், விலை உயர்ந்த நெக்லஸ் ஒன்றை திருடும் காட்சி ரசிக்க வைக்கிறது. மற்றபடி படத்தில் எந்தவிதமான டிவிஸ்டோ, புதுமையான காட்சிகளோ இல்லை. எப்போதும் போல இந்த படத்திலும், தனது சொத்துக்களை மக்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டு, மழையில் நனைந்தபடி செல்கிறார். மற்ற ரஜினி படங்களில் ரசிக்ககூடிய அளவுக்கு இருக்கும் இதுபோன்ற காட்சிகள் கூட இந்த படத்தில் ரசிக்க முடியவில்லை என்ற போதில், படத்தில் வரும் வெள்ளைக் காரர்களைக் காட்டிலும் ரஜினியின் ரசிகர்கள் கண்களுக்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தான் பெரிய வில்லனாக தெரிகிறார்.

முதலிரவில் கண்ணீர் விட்ட மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்



திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் சேகர் (26), பத்மா (22). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இவர்களது திருமணம் கடந்த 10–ந் தேதி நடந்தது. நண்பர்கள், உறவினர்கள் சூழ சுபமுகூர்த்த நேரத்தில் தேவியின் கழுத்தில் தாலி கட்டினார் சேகர். தொடர்ந்து அனைத்து சடங்குகளும், திருமண விருந்தும் தடபுடலாக நடந்தது. மாலையில் பெண்வீட்டிற்கு மறு வீடும் சென்று வந்தனர் புதுமணத் தம்பதியினர்.
அன்று இரவு புதுமாப்பிள்ளை சேகர் முதலிரவு அறையில் புதுப்பெண் தேவிக்காக பரபரப்புடன் காத்திருந்தார். வாழ்க்கை துணையாக வரப்போகும் மனைவியிடம் என்னவெல்லாம் பேசலாம் என தனக்குள்ளே பேசி அவர் ஒத்திகை பார்த்துக் கொண்டார். நேரம் ஆக ஆக அவருக்கு படபடப்பு கூடியது.
அப்போது அறை கதவை திறந்து கொண்டு தேவி பால் செம்புடன் நுழைந்தாள். சரசரக்கும் பட்டுப் புடவை, தலை நிறைய மல்லிகை பூ என தேவதை போல் மெல்ல சேகரை நோக்கி தேவி நடந்து வந்தாள். சேகரின் மனம் உற்சாகத்தில் துள்ளியது. அருகில் வந்த தேவி, குமாரின் காலை தொட்டு வணங்கினாள். அவளின் தோளை தொட்டுத் தூக்கினார் சேகர். அப்போது தேவியின் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது.
நல்ல கணவன் கிடைத்த சந்தோஷத்தில் தேவி ஆனந்த கண்ணீர் வடிக்கிறாள் என நினைத்த சேகர் தேவியின் கண்ணீரை துடைத்தார். ‘‘உன் கண்ணீல் இனி கண்ணீரே வரக்கூடாது. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துக் கொள்வேன்...’’ என்றார் சேகர். அதற்கு பிறகு தான் தேவி கூறிய வார்த்தைகள் சேகரை இடியாய் தாக்கின. ‘‘என் மனது என்னிடம் இல்லை. அது எங்கள் ஊரில் கல் உடைக்கும் தொழில் செய்யும் வசியிடம் உள்ளது. மனதை பறி கொடுத்து விட்டு எப்படி நான் உங்களுடன் வாழ்வேன்?’’ என்றாள்.
இதை கேட்டதும் சேகரின் புது மாப்பிள்ளை முறுக்கு உடைந்து நொறுங்கியது. வாழ்வில் வசந்தமாக மனைவி வரப்போகிறாள் என நினைத்திருந்த நேரத்தில் புயல் வந்து தாக்கியது போல் சின்னா பின்னமானார் சேகர். ‘‘ஊர் அறிய நமக்கு திருமணம் நடந்து விட்டது. இதற்கு பிறகு முதலிரவு வேறு ஒருவனை காதலிப்பதாக சொல்கிறாயே? நிச்சயதார்த்தம் முடிந்த பிறகாவது சொல்லிருக்கலாமே?’’ என்றார்.
‘‘சொல்லத்தான் நினைத்தேன் ஆனால் முடியவில்லை. என் மனது முழுவதும் வசியிடம் தான் உள்ளது. என்னை அவரிடம் நீங்கள் தான் சேர்த்து வைக்க வேண்டும். இல்லா விட்டால் நான் செத்துவிடுவேன்’’ என்றாள் தேவி.
தான் தாலி கட்டிய மனைவி தன்னை வேறு ஒருவருடன் சேர்த்து வைக்கும் படி தன்னிடமே கூறுவதை கேட்டு நொந்து போன சேகர். அமைதியாக அமர்ந்தார். விடிய விடிய யோசித்தார். மனைவியை அவளது காதலனுடன் சேர்த்து வைப்பது தான் சரி என அவருக்கு தோன்றியது.
காலையில் சேகர் தனது உறவினர்களை அழைத்து பேசினார். தேவியின் பெற்றோரிடமும் அவர் காதல் விவகாரம் குறித்து கூறினார். இதையடுத்து வசியை அழைத்து பேசினர். அவரும் தேவியை திருமணம் செய்வதாக கூறினார். இதனால் உடனே அருகில் உள்ள ஒரு கோவிலில் தேவி– வசி திருமணம் நடந்தது.
யாரும் விட்டுக் கொடுக்க முடியாத பந்தமான மனைவியையே அவளது விருப்பத்திற்காக விட்டுக் கொடுத்த சேகரை அனைவரும் பாராட்டினர். இந்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா?



சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது,”சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.
மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும்.
அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.
அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும்.
எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும்.
எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான்.
யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும்.
தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.
ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும்.
பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும்.
வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள்.
அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம்.
அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும் ”என்று அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது: பஸ், ரயில் வசதிகள் அதிகரிக்காததே காரணம்


தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது. மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து அதிகரிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்தபடி உள்ளன. இந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி போக்குவரத்துத்துறை பதிவேடு களின்படி, தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சத்து 72 ஆயிரத்து 131 வாகனங்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக் குள் அது இரண்டு கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதியன்று, மாநிலத்தில் ஒரு கோடியே 80 லட்சத்து 64 ஆயிரத்து 787 வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இதன்படி ஓராண்டு காலத்துக்குள், 17 லட்சத்து 7 ஆயிரத்து 344 வாகனங் கள் புதிதாக பதிவு செய்யப்பட்டி ருக்கின்றன. ஒரே ஆண்டில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இருசக்கர வாகனங்கள்
தமிழகத்தில், நவம்பர் 1ம் தேதி நிலவரப்படி, இருசக்கர வாகனங் களின் எண்ணிக்கை ஒரு கோடியே 64 லட்சத்து 23 ஆயிரத்து 530 ஆகும். இது மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 83 சதவீதமாகும். தமிழகத்தில் கடந்த 2013-ம் இதே காலகட்டத்தில் ஒரு கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்து 964 இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
தமிழகத்தில் நவ.1-ம் தேதி நிலவரப்படி 17 லட்சத்து 55 ஆயிரத்து 245 கார்கள் இயங்கு கின்றன. கடந்த ஆண்டில் அதே காலகட்டத்தில், 15 லட்சத்து 95 ஆயிரத்து 376 கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
சென்னையில் பெருகும் வாகனங்கள்
இதுபோல், சென்னையில் கடந்த 2013 நவம்பர் 1-ம் தேதியன்று பதிவாகியிருந்த மொத்த வாகனங் களின் எண்ணிக்கை 40 லட்சத்து 55 ஆயிரத்து 593 ஆகும். அது கடந்த நவம்பர் 1-ம் தேதிப்படி, 43 லட்சத்து 54 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத் தில் இயங்கும் மொத்த வாகனங் களில் சுமார் நான்கில் ஒரு பங்கு (23%) சென்னையில் ஓடிக் கொண் டிருப்பது குறிப்பிடத்தக்கது.
2 கோடியைக் கடந்தது
இது குறித்து போக்குவரத்துத் துறையினர், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நவ.1 தேதிப்படி, 1.97,72,131, வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் சராசரியாக ஒரு நாளில் 6,372 புதிய வாகனங்கள் பதிவாகின்றன. மாத சராசரி 1,40,193 ஆகும். இதை வைத்துப் பார்க்கும்போது தற்போது 2 கோடியைக் கடந்தி ருக்கும். இந்தியாவில் 2 கோடி வாகனங்கள் என்ற எண்ணிக் கையை கடந்துள்ள ஒரே மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு 2013 மார்ச்சில் 2 கோடி எண்ணிக்கை எட்டப்பட்டது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக உத்தரபிர தேசமும், குஜராத்தும் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து அதிகரிக்காததே முக்கிய காரணம் என சென்னை பெரு நகர் வளர்ச்சிக் குழுமத்தைச் சேர்ந்த நகரமைப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சென்னையைக் காட்டிலும் சிறிய நகரமான பெங்களூருவில் 6 ஆயிரம் அரசு பஸ்கள் இயங்கு கின்றன. ஆனால், சென்னையில் 3,800 பஸ்கள் மட்டுமே இயங்கு கின்றன. அதுபோல், கும்மிடிப் பூண்டி, அரக்கோணம் மார்க்கத்தில் ரயில்களின் எண்ணிக்கை தேவைக் கேற்ப அதிகரிக்கப்படவில்லை.
மேலும் நகரின் உட்புறப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி முழுமையாகக் கிடைக்கவில்லை. அதனால் இருசக்கர வாகனங்களையும் கார்களையும் மக்கள் நாடுகின்றனர். மாநிலத்தில் பஸ் வசதியில்லாத பகுதிகளுக்கு அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், வாகனப் பெருக்கம் காரணமாக ஏற்படும் மாசும் குறையும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Blogger Widgets
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. How To Do Anything - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger